இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

Mayoorikka
3 years ago
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், 14 மாவட்டங்களில் 620 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 2 வீடுகள் முழுமையாகவும் 235 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4