மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

Mayoorikka
3 years ago
மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கை வர்த்தகருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது!

பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

அத்துடன், 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதும் சில பகுதியிலுள்ள மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பகலுணவு திட்டத்திற்காக அமைக்கப்படுகின்ற நிதியத்தின் ஊடாக உணவு வழங்கும் நடவடிக்கையை இரு மடங்காக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4