ஊழியர்களுக்கு முதல் மின்னஞ்சலிலேயே அதிர்ச்சி கொடுத்த எலோன் மஸ்க் - தொடரும் அதிரடி
Nila
2 years ago
Twitter நிறுவனத்தின் புதிய உரிமையாளரான செல்வந்தர் எலோன் மஸ்க் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு முதல் முறையாக அதிகாரபூர்வ மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறு வேலை செய்வதற்கு இனி அனுமதியில்லை என்று அறிவித்தார்.
ஊழியர்கள் Twitter அலுவலகத்தில் வாரத்துக்குக் குறைந்தது 40 மணி நேரமாவது வேலைபார்க்கவேண்டும் என்ற விதிமுறையையும் மஸ்க் தமது மின்னஞ்சலில் முன்வைத்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் Twitterஇன் வருமானத்தில் பாதியளவு, தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தும் பயனீட்டாளர்களிடமிருந்து வருவதை எதிர்பார்ப்பதாக மஸ்க் தளத்தின் ஊழியர்களிடம் மின்னஞ்சலில் தெரிவித்தார்.