யாழில் நடந்த பெரும் சோகம் - கிணற்றுக்குள் இருந்து தாயும் 7 மாதக் குழந்தையும் சடலமாக மீட்பு

Nila
3 years ago
யாழில் நடந்த பெரும் சோகம்  - கிணற்றுக்குள் இருந்து தாயும் 7 மாதக் குழந்தையும் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தையும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

மிருசுவில் தெற்கை சேர்ந்த 40 வயதான பிரகாஷ் சந்திரமதி  மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 
 
கணவன் மனைவிக்கு இடையில் நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில்,  அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடியுள்ளார். இந்நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலங்களாக  மீட்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். 
 
அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். 
 
உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4