பிரான்ஸ் மருத்துவதுறையின் அபூர்வ சாதனை…. மறுவாழ்வு பெற்ற பெண்

Nila
1 year ago
பிரான்ஸ் மருத்துவதுறையின் அபூர்வ சாதனை…. மறுவாழ்வு பெற்ற பெண்

பிரான்ஸ் மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முதல் முறையாக மூக்கை இழந்த பெண்ணுக்கு 9 வருடங்களின் பின்னர் மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல்பாகத்தில் இருந்து செயற்கையாக மூக்கு ஒன்றை உருவாக்கி, அதை பெண் ஒருவருக்கு பொருத்தி பிரான்ஸ் மருத்துவத்துறையினர் சாதனை படைத்துள்ளனர்.

Toulouse நகர பல்கலைக்கழக மருத்துவமனையில் இச்சிகிச்சை இடம்பெற்றிருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் பெண் ஒருவருக்கு புற்று நோய் காரணமாக அவரது மூக்கு அகற்றப்பட்டது.

அதன் பின்னர் மூக்கு இல்லாமல் வாழ்ந்த குறித்த பெண்ணுக்கு இவ்வாரத்தில் மீண்டும் மூக்கு கிடைத்துள்ளது. குறித்த பெண்ணின் உடல் தசைகளையும், சில செயற்கை உயிரியல் பொருட்களையும் கொண்டு அவரது மூக்கு உருவாக்கப்பட்டது.

பெண்ணின் கைகளில் 3D Print மூலம் இந்த மூக்கு உருவாக்கப்பட்டு இரத்த ஓட்டம் கொண்ட உறுப்பாக வளர்க்கப்பட்டது. பின்னர் குறித்த மூக்கு கைகளில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மூக்கில் பொருத்தப்பட்டது.

இது போன்ற சம்பவம் இடம்பெறுவது உலகில் முதன் முறையாகும். Toulouse புற்றுநோயிற்கான பல்கலைக்கழக மருத்துவமனை இந்த சாதனையை படைத்துள்ளது. நோயாளி நலமுடம் இருப்பதாகவும், அவரது உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.