கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு இளைஞர்களால் சிறுமி ஒருவர் அனுமதி

Kanimoli
3 years ago
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு இளைஞர்களால் சிறுமி ஒருவர் அனுமதி

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு இளைஞர்களால் சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட சிறு நேரத்திலேயே அச் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்த இருவரும் நொடிப்பொழுதில் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நோயாளியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சுமார் 15 வயதுடைய சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் காணப்படுவதாகவும், அவை தாக்குதலால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.

வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பு கமரா மூலம் இளைஞர்கள் வந்த கார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4