மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று - கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 10,729 பேருக்கு பாதிப்பு உறுதி
#China
#Covid 19
Prasu
2 years ago
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நகரங்களில் 10 ஆயிரத்து 729 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது.
இதனால் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கும் நிலையில் இருக்கின்றனர்.
மேலும் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறி உள்ளனர். மேலும் சில கடுமையான கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து
பொதுமக்கள் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தகராறு செய்து வருகின்றனர்.