மீண்டும் அதிகரித்துள்ள எரிபொருள்களின் விலைகள்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Mayoorikka
3 years ago
மீண்டும் அதிகரித்துள்ள எரிபொருள்களின் விலைகள்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இலங்கையில் சில எரிபொருள்கள் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று   வெள்ளிக்கிழமை  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

 டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினால் அதிகரித்து 430 ரூபாவாக உள்ளது, அதேவேளை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாவாக விற்பனையாகுகின்றதாகவும்  பெற்றோலிய கூட்டுத்தாபனம்  மேலும் குறிப்பிட்டுள்ளது.

 இதனிடையே  ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை  லங்கா ஐ.ஓ.சியும் டீசல் விலையை 15 ரூபாயினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4