புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவன் பலி

Kanimoli
3 years ago
புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவன் பலி

புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் சித்தாண்டி முறக்கொட்டான்சேனை தேவபுரம் எனும் இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4