கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் மக்களை வீதிகளில் மிகவும் அவதானமாகவும் மெதுவாகவும் பயணிக்குமாறு மாகாண பொலிஸ் மத்தியப் பிராந்தியத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி முதல் இடம்பெற்ற 11 விபத்துக்களில் 8 மிக ஆபத்தானவை என தங்கள் அதிகாரிகளின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் மத்திய பிராந்தியத்தில் ஏற்கனவே 61 பேர் விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய பிராந்தியத்தின் தளபதியான டுவைட் பீர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 7 ஆம் திகதியன்று தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இரண்டிலும் இதனை பதிவிட்டுள்ளார்.
வேகம் மற்றும் கவனக்குறைவு இந்த கோர விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாகும். கடந்த ஆண்டு இந்த நேரத்துடன் ஒப்பிடுகையில், 55 சதவீதம் விபத்துக்களனிக் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாகாண மக்கள் விடுமுறைக் காலத்திற்கு பயணங்களை மேற்கொள்ளும் போது, வீதிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு ஓட்டுநர்களுக்கு நினைவூட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.