சீனாவில் கல்வி கற்க செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசேட நிவாரணம்: விமான போக்குவரத்து அமைச்சு

Mayoorikka
1 year ago
சீனாவில் கல்வி கற்க செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசேட நிவாரணம்: விமான போக்குவரத்து அமைச்சு

சீனாவில் கல்வி கற்க செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசேட  சலுகை  வழங்க விமான போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதன்படி, விமான டிக்கெட்டுகளுக்கான சலுகை முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முன்மொழிவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் கல்வி கற்கச் செல்லும் இலங்கை மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.   அவற்றுள் டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் விமானப் பயணச்சீட்டுகளின் விலையும் அதிவேகமாக அதிகரித்தமையே பிரதான பிரச்சினையாக இருந்தது.

கொரோனா காலத்திற்கு  முன்பு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்த சீனாவுக்கான விமான டிக்கெட்டின் விலை தற்போது 4.5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.