நாட்டில் இருக்க வேண்டிய தொழில் வல்லுநர்கள் அடுத்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Mayoorikka
1 year ago
நாட்டில் இருக்க வேண்டிய தொழில் வல்லுநர்கள் அடுத்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

எதிர்காலத்தில் அரசாங்கம் விதிக்கவுள்ள வருமான வரி காரணமாக நாட்டில் இருக்க வேண்டிய தொழில் வல்லுநர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணனித் துறையில் உள்ளவர்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள வருமான வரி முறையின் ஊடாக சிலர் தமது உண்மையான வருமானத்தை மறைக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள வருமான வரி முறையினால் உத்தேசிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.