கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதி மரணம்
Prathees
2 years ago
கடந்த 6ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த 9ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கைதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பல நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தப்பியோடிய கைதிகளில் மேலும் 7 கைதிகளே கைது செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.