மது அருந்தியவரை கைது செய்ய முயன்ற பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல்

Prasu
3 years ago
மது அருந்தியவரை கைது செய்ய முயன்ற பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல்

கலவானை நகரில் மது அருந்திக்கொண்டிருந்த நபரை கைதுசெய்ய முயற்சித்த உப பொலிஸ் பரிசோதகர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை உப பொலிஸ் பரிசோதகர் கைதுசெய்ய முயற்சித்தபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர் கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை மது அருந்திய சந்தேக நபர் கலவானை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4