கொவிட் காலத்தில் குறைக்கப்பட்ட எதனோலுக்கான வரியை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானம்

Prasu
1 year ago
கொவிட் காலத்தில் குறைக்கப்பட்ட எதனோலுக்கான வரியை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானம்

கொவிட் தொற்று நோய் காலத்தில் குறைக்கப்பட்ட கிருமி நாசினி தயாரிப்பதற்கு உபயோகிக்கும் எதனோலுக்கான வரியை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு வரியை அதிகரிப்பதன் மூலம் 1.6 பில்லியன் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று நிலைமையின் காரணமாக கிருமி நாசினி தயாரிப்பு பாரியளவில் அதிகரித்தது. எனவே இதனை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் எதனோலுக்கான வரி கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி இரு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டது.

அத்தோடு கள் லிற்றருக்காக அறவிடப்படும் வரியை 25 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் கள் லீற்றருக்கான வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டமையால் பெற்றுக் கொள்ளப்பட்ட இலாபத்தின் பயன்கள் நுகர்வோரை சென்றடையவில்லை என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.