தாமரை கோபுரத்தை இதுவரை 267, 000 பேர் பார்வையிட்டுள்ளனர்

Prathees
1 year ago
தாமரை கோபுரத்தை இதுவரை  267, 000 பேர்  பார்வையிட்டுள்ளனர்

கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டு 55 நாட்களில் 267,000 இற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டதாக கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க  தெரிவித்தார்.

தாமரை கோபுரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மூன்று மாதங்களுக்கு பிறகு கணக்கிடப்படுகிறது என்றார்.

வார இறுதி நாட்களில் அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதாகவும் அவர் கூறினார்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும் தாமரை கோபுரத்தை பார்வையிட பெரியவருக்கு 500 ரூபாயும், ஒரு குழந்தைக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.