எம்டி ஹீரோயிக் இடூன் என்ற எண்ணெய்க் கப்பலில் உள்ள  26 பேரில், 08 இலங்கைப் பிரஜைகளை விடுதலை செய்வதற்கு முடிவு

Kanimoli
1 year ago
எம்டி ஹீரோயிக் இடூன் என்ற எண்ணெய்க் கப்பலில் உள்ள  26 பேரில், 08 இலங்கைப் பிரஜைகளை விடுதலை செய்வதற்கு முடிவு

கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து  எக்குவடோரியல் கினியா நாட்டு கடற் படையால்  தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்டி ஹீரோயிக் இடூன் என்ற எண்ணெய்க் கப்பலில் உள்ள  26 பேரில், 08 இலங்கைப் பிரஜைகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம்  குறித்த இலங்கை பிரஜைகளுடன் தொடர்பில் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


கப்பலின் பணியாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த 16 மாலுமிகளும், போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவர் உள்ளனர்.


எக்குவடோரியல் கினியாவின், கடற்டையால், கடந்த  ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்த 26 பேரும் கைது செய்யப்பட்டனர்.   இவர்கள் நைஜீரிய கடற்படையினரிடம்  கையளிக்கப்படலாம்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நைஜீரிய எண்ணெய் வயலில் இருந்து எரிபொருளை திருடியதாக இந்த கப்பல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் நைஜீரிய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து இந்த கப்பல் தப்பி விட்டதாகவும் கூறப்பட்டது.


இந்தநிலையில் சில நாட்களுக்குப் பிறகு, நைஜீரிய கடற்படையின் வேண்டுகோளின் பேரில், எக்குவடோரியல் கினியாவிலிருந்து வந்த கடற்படைக் கப்பல் மூலம் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்த கப்பல் தடுக்கப்பட்டது.


இத்தனையடுத்து இந்த கப்பலின் மாலுமிகள் எக்குவடோரியல் கினியாவின் தலைநகரான மலாபோவிற்கு துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


இதேவேளை மேலதிக விசாரணைகளுக்காக கப்பலை மீண்டும் நைஜீரியாவிற்கு நகர்த்துவதற்கு எக்குவடோரியல் கினியா மற்றும் நைஜீரியா அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


 இந்த சந்தர்ப்பதிலேயே குறித்த கப்பலில் உள்ள இலங்கையர்களை விடுவிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது