பாரிய அளவில் அதிகரித்து இருந்த கம்பியின் விலை தற்போது குறைந்துள்ளது

Kanimoli
3 years ago
பாரிய அளவில் அதிகரித்து இருந்த கம்பியின் விலை தற்போது குறைந்துள்ளது

பாரிய அளவில் அதிகரித்து இருந்த கம்பியின் விலை தற்போது குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனடிப்படையில், ஒரு டன் கம்பியின் விலை ஒரு லட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு டன் கம்பியின் விலை தற்போது 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி, தற்போது 1635 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 2700 ரூபாவுக்கு விற்கப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி, 2395 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

அத்துடன் 16 மில்லிமீற்றர் கம்பியின் விலை 4325 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து ஒரு மூடை தற்போது சந்தையில் 2975 ரூபாவுக்கு விற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4