விசேட அறிவிப்பு - கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோகத் தடை

#SriLanka #Colombo #water board #WATER CUT
Thamilini
51 minutes ago
விசேட அறிவிப்பு - கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்விநியோகம் இரத்து செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்றைய தினம் 24 மணிநேரத்திற்கு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய இன்று இரவு 8:00 மணி முதல் நாளை  (04) இரவு 8:00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதன் காரணமாக நுகேகொட, கொஹுவல, தெஹிவல, மவுண்ட் லவினியா, ரத்மலான, மொரட்டுவ, ராவத்தவத்த, சொய்சபுர, அங்குலன, இந்திபெத்த, கட்டுபெத்த, கள்ளமுல்ல, முத்துவல், கொரலவெல்ல, எகொட உயான மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர், இந்த 24 மணி நேரத் தடையின்போது தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சபை வலியுறுத்தியுள்ளதுடன், இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4