அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து நிதி அமைச்சரின் கருத்து

Prathees
1 year ago
அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து நிதி அமைச்சரின் கருத்து

நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று கருத்து வெளியிட்டார்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் வருடத்தில் 7,885 பில்லியன் ரூபா அரசாங்க செலவீனமாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 1,785 பில்லியன் ரூபா அதிகரிப்பு எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அதிக செலவினம் ஒதுக்கப்படுகிறது

இந்த வருட வரவு செலவு திட்டத்தில் அது மாற்றப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியில் எழுச்சி பெற முயற்சிக்கும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டை அழைக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.