இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து இழுத்த பொலிஸ் மா அதிபர்

Prathees
1 year ago
இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து இழுத்த பொலிஸ் மா அதிபர்

இரண்டு பொலிஸாரின் கழுத்தை பிடித்து தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட இரு பெண்களை கைது செய்யுமாறு கோரி பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் இந்த செயலை செய்துள்ளார்.

இது தொடர்பான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (12) மூன்று இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களை பொலிஸார் அடக்கிய விதம் மிகவும் அவமானகரமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டாளர்களை தடுத்துவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து களுத்துறையில் இருந்து கொழும்புக்கு பாதயாத்திரையாக சென்ற இரு பெண்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சட்டத்தை குறிப்பிடாமல் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரகபொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் ஜீப்பில் ஏற்றிச் செல்வதில் அக்கறை காட்டவில்லை என குற்றஞ்சாட்டி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிளை கழுத்தை பிடித்து சித்திரவதைக்கு உட்படுத்திய விதத்தை காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களும் பகிரங்கமாகியுள்ளன.

எந்தவொரு காரணத்திற்காகவும் பெண்களை துன்புறுத்துவதும் ஒடுக்குவதும், அமைதியான போராட்டங்கள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது எந்த அடிப்படையும் இல்லாமல் கொடூரமாக தாக்குதல் நடத்துவது பொலிஸாரின் கேவலமான செயல் என சாலி பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பொலிஸாரின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதை மேலும் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.