பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் புதிய ஒப்பந்தம்

Nila
2 years ago
பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் புதிய ஒப்பந்தம்

பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் ரோந்து செல்லும் 200 பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. மேலும் பிரான்ஸ் புலம்பெயர்ந்தோரை அதிகளவில் வெளியேறுவதைத் தடுக்க முயற்சிக்கும்.

ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் சம்மதித்துள்ளது.இது குறித்து, பிரித்தானியாவின் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் க்ளெவர்லி மற்றும் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி கேத்தரின் கொலோனா ஆகியோர் வெள்ளியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.அதில், எல்லா வகையான சட்டவிரோத குடியேற்றங்களையும் கையாள்வதற்கான அவசரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அதிகாரிகளும், இந்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.வரும் வாரத்தில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்றும், மணல் திட்டுகளில் மறைந்திருக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் கண்டறிய கூடுதல் பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு சிறிய படகுகள் மூலம் 28,526 புலம்பெயர்ந்த மக்கள் ஆங்கிலக் கால்வாயை கடந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 40,000 புலம்பெயர்ந்தோரை கடந்தது. இது பிரித்தானியாவின் புதிய பிரதமரான ரிஷி சுனக் மீது அதிக அழுத்தத்தை கொடுத்துள்ளது.

  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!