அடுத்த ஆண்டு மின் கட்டணத்தை, 60 விகிதத்தால்  உயர்த்துவதற்கு நடவடிக்கை

Prabha Praneetha
1 year ago
அடுத்த ஆண்டு மின் கட்டணத்தை, 60 விகிதத்தால்  உயர்த்துவதற்கு நடவடிக்கை

அடுத்த ஆண்டு மின் கட்டணத்தை, 60 விகிதத்தால்  உயர்த்துவதற்கான நடவடிக்கை குறித்து அதிகாரிகளால் முன்மொழியப்பட்டது. எரிசக்தி துறை அதிகாரிகளின் மாநாடு ஒன்றின் போது இந்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் அதிகரிப்பு காரணமாக மின்சார கட்டண விகிதங்களை அதிகரிக்க சில அதிகாரிகளின் முன்மொழிவை செய்துள்ளனர். 

உயரும் படிம எரிபொருளின் விலையைப் பொறுத்து, கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில், இலங்கை மின்சார சபை 375 வீத கட்டண உயர்வைக் கோரியபோதும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 75 வீத அதிகரிப்பை மட்டுமே அனுமதித்தது.

இந்தநிலையில் எரிசக்திக்காக புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பது முடிவில்லாத, விரும்பத்தகாத  சுழற்சியாக இருக்கும் என்று தொழில்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

இதேவேளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமித குமாரசிங்கவின் கருத்தின்படி, இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கான வழி, தேசிய  மின்சார கட்டத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உட்செலுத்தலை அதிகரிப்பதே தீர்வு என குறிப்பிட்டுள்ளார்.