சர்வதேச நீரிழிவு தினம் இன்று: யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு

Mayoorikka
3 years ago
சர்வதேச நீரிழிவு தினம் இன்று: யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு

சர்வதேச நீரிழிவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முகமாக யாழ் போதனா வைத்தியசாலையின்ஏற்பாட்டில் இன்றைய தினம் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 யாழ் போதனஆ வைத்திய சாலையில் இருந்து ஆரம்பமாகியுள்ள விழிப்புணர்வு பேரணி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற உள்ளது

குறித்த விழிப்புணர்வு பேரணியில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்,

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4