இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கிடையே பரவி வரும் பயங்கர நோய் தொற்று

Nila
1 year ago
இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கிடையே பரவி வரும் பயங்கர நோய் தொற்று

இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலருக்கு பயங்கர தொற்றுநோய் ஒன்று பரவிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள Manston என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்தில் பலருக்கு பயங்கர தொற்றுநோயாகிய டிப்தீரியா என்னும் நோய் பரவிவருவதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.நவம்பர் மாதம் 10ஆம் திகதி நிலவரப்படி, இங்கிலாந்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களில் 39 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மையங்கள் தொற்றுநோய் பரவும் பயங்கர அபாயத்தில் உள்ளதாக கருதப்படவேண்டும் என பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சி எச்சரித்துள்ளது.

பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சியின் இணை இயக்குநரான Dr காயத்ரி அமிர்தலிங்கம் கூறும்போது, உள்துறை அலுவலகத்துடன் இணைந்து புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தடுப்பூசிகளும் ஆன்டிபயாட்டிக்குகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், Manstonஇல் மட்டுமல்லாமல், ஸ்விண்டன், ஷெஃபீல்ட், கென்ட், பர்மிங்காம், ஹெட்ஃபோர்ட்ஷையர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் ஆகிய இடங்களிலும் இந்த டிப்தீரியா தொற்று பரவியுள்ளது குறித்த விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.