பிரித்தானியாவில் புடினுடைய உளவாளிகள் 1,000 பேர் ஊடுருவல்

Nila
2 years ago
பிரித்தானியாவில் புடினுடைய உளவாளிகள் 1,000 பேர் ஊடுருவல்

பிரித்தானியாவில் புடினுடைய உளவாளிகள் 1,000 பேர் ஊடுருவியிருப்பதாக கிடைத்துள்ள தகவல் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த ரஷ்ய உளவாளிகள், அரசு இயந்திரம் முதல் சாதாரண அலுவலகங்கள்வரை பல்வேறு இடங்களில் பரவியிருக்கிறார்களாம்.

தங்கள் அடையாளத்தை மறைத்து, டெக்சி சாரதிகள், காபி ஷாப் பணியாளர்கள், ஆசிரியர்கள் என தினமும் சாதாரணமாக பணி செய்யும் பணியாளர்களைப் போல அவர்கள் பணி செய்துவருகிறார்களாம்.

காலை முதல் மாலை வரை அலுவலகம் செல்லும் சாதாரணப் பணியாளர்கள்போல நாடு முழுவதும் பரவியிருக்கும் இந்த நபர்கள், பிரித்தானிய அரசு குறித்த இரகசிய தகவல்களை சேகரிக்க முயன்று வருகிறார்களாம்.

லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றி வந்த, உளவாளிகள் என நன்கு தெரிந்த நபர்களின் எண்ணிக்கை சமீபத்திய சில ஆண்டுகளாக குறைந்துவிட்ட நிலையில், ரஷ்யாவுக்காக உளவு பார்ப்பவர்கள் என சந்தேகிக்கப்படும், ஆனால், உறுதி செய்யப்படாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!