வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தியின் திருமணம்
#President
Keerthi
2 years ago
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி நோமியின்(28) திருமணம் வெள்ளை மாளிகையில் வரும் சனிக்கிழமை நடக்கிறது.
ஜோ பைடனின் மகன் ஹிண்டரின் மகளான நோமியும், பீட்டர் நீலும்(25) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். வெள்ளை மாளிகையில் நடைபெறும் 19-வது வரலாற்று திருமணம் இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி, வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல்நிகழ்வு இதுவாகும்.
இதுவரை ஜனாதிபதிகளின் மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.