ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது : பாகிஸ்தான் அரசு

#Pakistan
Keerthi
2 years ago
ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது : பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது.

துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர்.

ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது. எனவே, இந்தியா குறைந்த விலையில் ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணையை வாங்கிக் கொண்டிருக்கிறது. 

இம்ரான் கான் ஆட்சியில் ரஷ்ய நாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குறைவான விலையில் எண்ணையை வாங்க ஒரு ஒப்பந்தம் முடிவு செய்ய உள்ளோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் ரஷ்யா மறுத்துவிட்டது. பாகிஸ்தான் நாட்டில் தற்போது எரிபொருளுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, ரஷ்ய நாட்டிடம் குறைந்த விலையில் எண்ணையை வாங்க பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினர் விருப்பம் தெரிவித்துவிட்டனர். 

ரஷ்ய நாட்டிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது. இது பற்றி அந்நாட்டு அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!