சீனாவுடன் பனிப்போர் இருக்காது! அமெரிக்கா நம்பிக்கை!

Kanimoli
1 year ago
சீனாவுடன் பனிப்போர் இருக்காது! அமெரிக்கா நம்பிக்கை!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சமரச சந்திப்பைத் தொடர்ந்து, சீனாவுடன் 'புதிய பனிப்போர்' இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
சீனா தைவானை ஆக்கிரமிக்கும் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தாம் பதவியேற்ற பிறகு இரண்டு வல்லரசு தலைவர்களுக்கு இடையே நடந்த முதல் நேரில் சந்திப்பின் பின்னரே பைடனின்; கருத்து வெளியாகியுள்ளது.
இந்தோனேசிய பாலித் தீவில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் வட கொரியா மற்றும் ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
சொகுசு ஹோட்டல் ஒன்றில்; நடைபெற்ற மூன்று மணி நேர சந்திப்பில், இரண்டு தலைவர்களும் தாய்வான் உட்பட பல தலைப்புகளில் விவாதித்தனர்.
பீய்;ஜிங்கால் உரிமைகோரப்படும், சுய-ஆளப்படும் தாய்வான் தீவு அமெரிக்காவை ஒரு நட்பு நாடாகக் கருதுகிறது.
எனவே இது எப்போதும் அமெரிக்க-சீனா உறவுகளில் ஒரு கடினமான பிரச்சினையாக இருந்து வருகிறது.
ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பொதுச்சபையின் சபாநாயகர்; நான்சி பெலோசி தாய்வானுக்கு விஜயம் செய்தபோது பதற்றம் அதிகரித்தது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டி, தீவைச் சுற்றி பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளுடன் சீனா பதிலடி கொடுத்தது.
இந்தநிலையில், தாய்வான் சீனாவின் முக்கிய நலன்களின் மையமாக உள்ளது என்பதை சீன ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சமீபத்திய வாரங்களில், தாய்வான் மீது படையெடுப்பதற்கான திட்டங்களை சீனா தீவிரப்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்திருந்தனர்.

எனினும் சீனாவின் தரப்பில் படையெடுப்பதற்கான உடனடி முயற்சி எதுவும் இருப்பதாக தாம் நினைக்கவில்லை. பைடன் நேற்று தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்க்க முக்கிய மட்டங்களில் உரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டிய பொறிமுறையை அமைக்க இருவரும் ஒப்புக்கொண்டதாக பைடன்; கூறினார்.
இதன்படி வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கனும் விரைவில் சீனா செல்லவுள்ளார்.