சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு அறிவிப்பு

Mayoorikka
3 years ago
சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு அறிவிப்பு

சவூதி அரேபியாவில் நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய பல தொழில் வாய்ப்புகளை இலங்கை பெறப் போவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிர்மாணத் திட்டங்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த நாட்களில் சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முன் பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, குறித்த துறைகளில் தொழில்களுக்கு செல்ல விரும்புபவர்கள் உரிய பதிவு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4