பொருளாதார நெருக்கடியின் மிகக் கடுமையான கட்டம் கடந்துவிட்டது: என மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

Mayoorikka
1 year ago
பொருளாதார நெருக்கடியின் மிகக் கடுமையான கட்டம் கடந்துவிட்டது:  என மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கடுமையான பணவீக்கத்தை எதிர்நோக்கும் மக்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி குறுகிய கால தீர்வுகளை வழங்கி குறைந்த வருமானம் பெறும் மக்களை பாதுகாப்பதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான உண்மைகளை முன்வைக்கும் மாநாட்டில் இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நடக்கவிருந்த பொருளாதார வீழ்ச்சி தடுக்கப்பட்டு ஸ்திரப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு வருமானத்திற்கு பதிலாக கடனில் வாழும் முறையை மாற்றி நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.