இன்றைய வேத வசனம் 16.11.2022: உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 16.11.2022: உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்

சோதோம் கொமோரா மக்கள் தேவ சத்தத்தை கேட்கவில்லை தேவ கோபத்தை கண்டார்கள்!
தேவ சத்தம் அவர்களுக்கு ஓர் அன்பின் எச்சரிப்பு. தேவ கோபமோ அவர்கள் வாழ்விற்கே முடிவு.

பாவத்தில் உழல்கிறவர்மேல் தேவகோபம் ஊற்றப்படும் முன் தேவ சத்தம் கொடுக்கப்படுகின்றது.
எப்படி கொடுக்கப்படுகிறது என்பதை அந்தந்த நபர்கள் அறிவார்கள்.

ஆனால் அவர்கள் தேவ சத்தத்திற்குக் கீழ்படியவில்லையென்றால் துடி துடிப்பார்கள். அவர்களை ஆறுதல்படுத்த யாராலும் கூடாது.

தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் தேவ சத்தத்திற்குச் செவிகொடுக்காவிட்டால் மிகமிக சோகத்துடன் உலகைக் கடந்து செல்வர்.

சவுல் என்ற அந்த அரசன்,எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில், தேவ சத்தத்தை கேட்டும் அதை புறக்கணித்ததால் ஒரு நாள் தேவன் சவுலை புறக்கணித்தார்.

தனது பட்டயத்தை தரையிலே நாட்டி அதில் தன்னைத்தானே விழவைத்து தற்கொலை செய்தான்.
மனிதர் யார் யார் என்றாலும் தேவ சத்தம் அவர்களுக்கு நேராக வருகின்றது.

அவர்கள் உணர்வார்கள் என்றால் மனம் திரும்புவார்கள்.
மனம் திரும்புவார்கள் என்றால் மறுரூபம் அடைவார்கள்.

மறுரூபம் அடைவார்கள் என்றால் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

ஆமென்!!
அப்போஸ்தலர் 3:20
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!