வெளிநாட்டு கப்பலை சிறைப்பிடித்தது நைஜீரிய கடற்படை - 16 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது

Prasu
3 years ago
வெளிநாட்டு கப்பலை சிறைப்பிடித்தது நைஜீரிய கடற்படை - 16 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு தொடர்பாக வெளிநாட்டு கப்பல் மற்றும் அதில் இருந்த ஊழியர்களை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

நைஜீரியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு, அனுமதியின்றி கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 27 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

கடற்படையிடம் சிக்கிய கப்பல் ஊழியர்களில் 16 பேர் இந்தியர்கள். திருட்டு மற்றும் பைப்லைன் சேதங்களால் நாள் ஒன்றுக்கு 470,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை நைஜீரியா இழக்கிறது. 

சமீப காலமாக பாதுகாப்புப் படைகள் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. 

கடலில் கப்பல்களின் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மேலும் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணர ஒரு துணை பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டாண்மை எங்களிடம் உள்ளது என்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4