ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டும்-அமெரிக்கா அரசு

Prasu
3 years ago
ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டும்-அமெரிக்கா அரசு

டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது.

ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் ஏற்பட்டது. மேலும், அமெரிக்க போக்குவரத்து துறை கொள்கையின் அடிப்படையில், விமானங்கள் ரத்தானால் பயணிகளுக்கு அதற்குரிய கட்டணம் செலுத்தப்படவேண்டும்.

அவ்வாறு தரவில்லை என்றாலோ, கட்டணத்திற்கு மாற்றாக பற்று சீட்டுகளை மாற்றி வழங்குவதோ சட்டவிரோதம். ஏர் இந்தியா நிறுவனமானது, இந்த கொள்கைக்கு மாறாக செயல்பட்டது. எனவே, இது குறித்த 1900 புகார்கள், அமெரிக்க போக்குவரத்து துறைக்கு சென்றது. அந்தப் புகார்களில் பாதியை ஏர் இந்தியா நிறுவனம் நூறு நாட்களாக பரிசீலனை செய்தது.

இந்நிலையில் அமெரிக்க போக்குவரத்து துறையானது, இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 12,15,00,000 டாலர்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் இந்த பணத்தை திரும்ப தர தாமதப்படுத்தியதற்காக அபராதமும் விதித்துள்ளது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனமானது சுமார் 11,24,00,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4