சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, 2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலேயே கிடைக்கும்

Kanimoli
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, 2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலேயே கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, 2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலேயே கிடைக்கும் என்று தேசிய சபையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான  உப குழு தெரிவித்துள்ளது.
உபகுழுவின் ஆரம்ப அறிக்கையை ஊடகங்களுக்கு சமர்ப்பித்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையின் உப குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குழுவின் விசாரணைகளின் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜிய அளவுக்கு வந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதன் மூலம் இலங்கை தவறிழைத்துள்ளது.
இதனால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலேயே இலங்கைக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளாhர்.
இலங்கையின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120வீதத்தை எட்டியுள்ளது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் நாடு சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இலங்கைக்கு உதவுவோம் என்று உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் தெரிவித்துள்ளன' என்று ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் சனத்தொகையில் 20 பணக்காரர்களில் 12வீதமான சமுர்த்தி பயனாளிகளும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!