கொழும்பில் தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது

Kanimoli
3 years ago
கொழும்பில்  தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது

  கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வீதியில் செல்லும் நபர்களை ஏமாற்றி மயக்க மருந்து கலந்த பானங்களை குடிக்க கொடுத்து, அவர்கள் மயங்கிய பின்னர், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வரும் குழுவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

கைதான சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் பதுளை பிரதேசங்களை சேர்ந்த 63 மற்றும் 64 வயதான நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கொழும்பில் தற்காலிக விடுதிகளில் தங்கியிருந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, நாராஹென்பிட்டி மற்றும் எடேரமுல்ல பொலிஸ் பிரிவுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர்கள் கைது செய்யப்படும் போது, வெள்ளவத்தை பிரதேசத்தில் கொள்ளையிட்டு விற்பதற்காக கொண்டு சென்ற தங்க நகைகளைபொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

எனவே இவ்வாறான கொள்ளையர்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுன் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4