இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்! இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

Mayoorikka
3 years ago
இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்! இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் காவல்துறையில் முறைப்பாட்டை அளிக்க சரியான சூழல் இல்லை. 

ஒரு பெண் ஒரு காவல்துறை நிலையத்தில் துன்புறுத்துதல் பற்றி முறையிட வரும்போது காவல்துறையில் உள்ள அனைவரும் கூடிவிடுகிறார்கள். 

இந்தநிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ரகசியத்தன்மையை உறுதி செய்ய குறைந்தது 13 பெண் காவலர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில்; பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறி;ப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4