யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது

Kanimoli
3 years ago
யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது

யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகாயபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இளவாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரிடமிருந்து 5 லீட்டர் கோடா மற்றும் ஒரு லீட்டர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4