பிரித்தானியாவுக்கு போலி விசாவைப் பயன்படுத்தி செல்ல முயன்ற 3 இலங்கையர்கள் கைது

Kanimoli
3 years ago
பிரித்தானியாவுக்கு போலி விசாவைப் பயன்படுத்தி செல்ல முயன்ற 3  இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவுக்கு போலி விசாவைப் பயன்படுத்தி செல்ல முயன்ற 3  இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய நபர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 3  இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தங்களுடைய குடிவரவு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டருக்கு வந்திருந்தனர்.

கடமையில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, ​​விசாக்கள் போலியானது என கண்டறிந்தனர்.

இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4