நந்தலால் வீரசிங்கவின் 175 நாள் பதவிக்காலத்தில் 590 பில்லியன் ரூபா அச்சடிப்பு- கம்மன்பில

Prabha Praneetha
3 years ago
நந்தலால் வீரசிங்கவின் 175 நாள் பதவிக்காலத்தில் 590 பில்லியன் ரூபா அச்சடிப்பு-  கம்மன்பில

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் காலத்திலேயே அதிகளவில் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது அஜித் நிவாட் கப்ராலின் காலத்தில் ஒரு நாளில் அச்சிடப்பட்ட பணத்தை விட 55 மடங்கு அதிகம். 

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கவும் சமுர்த்தி கொடுப்பனவு போன்றவற்றை வழங்கவும் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பணத்தை அச்சிடும் செயலுக்கு அடிமையாகி இருப்பதால், அவரை கந்தாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4