பேய் உண்மையிலேயே இருக்கின்றதா? வெளிச்சத்திற்கு வரவுள்ள உண்மை - களமிறங்கிய தென்னாப்பிரிக்க குழு

Nila
3 years ago
பேய் உண்மையிலேயே இருக்கின்றதா?  வெளிச்சத்திற்கு வரவுள்ள உண்மை  - களமிறங்கிய தென்னாப்பிரிக்க குழு

பேய் உண்மையிலேயே இருக்கின்றதா என்பதைத் தெரிந்துகொள்வதில் பலருக்கும் ஆர்வம் உள்ள நிலையில் அதனை ஆராய்ந்து பார்க்க தென்னாப்பிரிக்காவில் ஒரு குழு இறக்கப்பட்டுள்ளது.

The Upsidedown என்ற அந்தக் குழு பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களை 2 ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றது.

பேய்கள் உண்மையில் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதே 5 ஆண்களும் இரு பெண்களும் கொண்ட அந்தக் குழுவின் குறிக்கோள்களாகும்.

அதற்காக அவர்கள் பல்லாயிரம் டொலர்களை செலவு செய்து பல கருவிகளையும் கைவசம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு கமராக்கள், வெப்பமும் அசைவும் கண்டுபிடிக்கும் கருவிகள், சுயமாக உருவாக்கிய செயலி போன்றவற்றை ஏந்தியவாறு இருளடைந்த கட்டடங்களில் பேய்களுக்கான தடயங்களை அவர்கள் தேடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை அவர்கள் வலுவான ஆதாரம் எதையும் சேகரிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4