கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு: நபரொருவர் படுகாயம்

Prathees
3 years ago
கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு: நபரொருவர் படுகாயம்

கிராண்ட்பாஸ் நவகம்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த “மன்ன கண்ணா” என்ற நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும், காயமடைந்த நபரின் கை மற்றும் தலையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர், பாதாள உலகக் குழு உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீதான தாக்குதலின் பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4