பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலியின் காதலன் மீது காவல்துறையினர் விசாரணை
Kanimoli
2 years ago
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலியின் காதலன் மீது காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர் .
குறித்த விசாரணை பிரியமாலியின் காதலனாக கருதப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி உரையாடலின் உண்மை குறித்து ஆராய மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக் குற்றச்சாட்டு தொடர்பாக பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
குறித்த வாக்குமூலத்தில் சமூக ஊடகங்களில் கூறப்படுவது போன்று தனது உரையாடல் சிறைச்சாலைக்குள்லிருந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல என இசுரு பண்டார தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஒலிப்பதிவு மற்றும் உரையாடல் எந்தத் தொலைபேசியில் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.