ரயிலில் அடிபட்டு இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

Prathees
2 years ago
ரயிலில் அடிபட்டு இளைஞன்  சம்பவ இடத்திலேயே  பலி

அனுராதபுரத்திற்கும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரத பாதையில் இன்று (21) இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மற்றும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையங்களுக்கு இடையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் விசேட புகையிரதமொன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர், உயிரிழந்த இளைஞன் அதே ரயிலில் கொண்டு வரப்பட்டு அனுராதபுரம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இளைஞனின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது புகையிரதத்தில் மோதி விபத்து ஏற்பட்டதா என்பது இதுவரையில் தெரியவரவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அநுராதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!