நாடாளுமன்றத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு
நாடாளுமன்றத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப் வெதராச்சி இன்று (21) நாடாளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து இந்த ஆர்ப்பாட்டதை மேற்கொண்டிருந்தார்.
வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரியே அவர் இந்தப் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்.
2023 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் தனது உரையை நிகழ்த்திய பின், நாடாளுமன்ற அரங்கின் நடுவே தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பல நாள் பல படகுகள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகவும், நியாயமான விலை கிடைக்காமல் கடற்றொழிலாளர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வுதர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.