வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

Kanimoli
1 year ago
வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

நாளை (22) நடைபெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை அறிவித்துள்ளார்

வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் கடந்த 15 ஆம் திகதி முதல் நாளை 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடத்தப்படவுள்ளதுடன், மாலையில் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதமான தெரிவுக்குழு விவாதம் நாளை மறுதினம் 23ஆம் திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி மாலை நடத்தப்படவுள்ளது

சற்று முன்னர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!