இலங்கை துறைமுகங்களை நோக்கி விரையும் வெளிநாட்டுக் கப்பல்கள்!

Nila
1 year ago
இலங்கை துறைமுகங்களை நோக்கி விரையும் வெளிநாட்டுக் கப்பல்கள்!

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நாட்டிற்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளன.நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுகங்களை, உல்லாசப் பிரயாணிகளை அழைத்து வரும் ஒன்பது பயணிகள் கப்பல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பிற்குள் 880 பயணிகளுடன் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது.

இதேவேளை 3,000 பயணிகளுடன் நவம்பர் 28 ஆம் திகதி மற்றுமொரு கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோய், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சமீபத்திய எழுச்சி காரணமாக சுற்றுலாத் துறையில் சரிவு ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!