அம்பலாங்கொடை தோட்டத்தில் வசித்த நபரொருவர் சடலமாக மீட்பு
Kanimoli
2 years ago
லுணுகலை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹொப்டன், அம்பலாங்கொடை தோட்டத்தில் வசித்த நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் வசித்து வந்த 65 வயது வேல்குமார் சுந்தரம் தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இரை தேடுவதற்காக, அப்பகுதியில் உள்ள ஐம்பது ஏக்கர் தனியார் தோட்டத்திற்கு கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை சென்றுள்ளார்.
எனினும் குறித்த நபர் வீடு திரும்பாததால் அவரின் சகோதரர் லுணுகலை பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை தொடர்ந்து பிரதேசவாசிகளுடன் இணைந்து கடந்த இரு நாட்களாக தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.