நாமல் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவார் - சுமணதாச அபேகுணவர்தன
Kanimoli
2 years ago
நாமல் ராஜபக்ச போன்றவர்கள் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும் அதிர்ஷ்டசாலிகள் என பிரபல சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ராஜபக்சவை இந்த நாட்டிலிருந்து அவ்வளவு எளிதாக ஒழித்துவிட முடியாது.
கம்யூனிஸ்ட் கட்சியும், சமசமாஜ கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தாலும், ராஜபக்சவின் அரசியல் தத்துவம் ஆச்சரியமானது.
ஏனெனில் மகிந்த ராஜபக்ச அளவுக்கு திருமணங்களில் கையெழுத்திட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. திருமண வீடுகளுக்கும், அறநிலையத்துறைக்கும் சென்ற தலைவர் வேறு இல்லை.
அந்த நெருக்கத்தால் அவரை சுற்றியுள்ளவர்களை எளிதில் குறைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.