இலங்யைின் தலைமை சாரணர் மற்றும் போசகர் பதவிகளை உத்தியோகபூர்வமாக ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கிவைப்பு
இலங்யைின் தலைமை சாரணர் மற்றும் போசகர் பதவிகளை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நேற்று (21) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இப்பதவிகள் இலங்கை சாரணர் இயக்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டதோடு சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோவால் உத்தியோகபூர்வ கழுத்துப்பட்டி மற்றும் நியமனச் சான்றிதழ் என்பன அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
சாரணர் இயக்கத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையும் இச்சந்தர்ப்பத்தில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது
இங்கு உரையாற்றிய சிறிலங்கா அதிபர் விக்ரமசிங்க "75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு சாரணர் இயக்கத்தின் பூரண ஆதரவைப் பெற எதிர்பார்கின்றோம்.
அதிபர் அலுவலகத்தின் கீழ், காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளில் இணைந்து செயற்படுமாறும் சாரணர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்" என தெரிவித்திருந்தார்.
பிரதான சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ, பிரதி பிரதான ஆணையாளர் எம்.எஸ்.எஸ். முஹீட், செயற்குழுத் தலைவர் ரன்சிறி பெரேரா மற்றும் ஏனைய அதிகாரிகள், ஹோமாகம மாவட்ட சாரணர் ஆணையாளர் கலாநிதி அனில் பெரேரா, புதிய மாவட்ட ஆணையாளர் கே.ஏ. சந்திரபத்மா, உதவி மாவட்ட ஆணையாளர் சுரங்க ஹந்தபான்கொட உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்